மேட்டுப்பாளையம் உதகை சாலையில் தனியார் நர்சரியில் மர்மமான முறையில் இறந்து கிடந்த புள்ளிமான்*..!

*மேட்டுப்பாளையம் உதகை சாலையில் தனியார் நர்சரியில் மர்மமான முறையில் இறந்து கிடந்த புள்ளிமான்*..!


                 மேட்டுப்பாளையம் காரமடை சிறுமுகை ஆகிய வனச்சரகங்களில் யானை கரடி காட்டெருமை சிறுத்தை காட்டுப்பன்றி காட்டுமான் புள்ளிமான் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகமாக புள்ளி மான்கள் உயிர் வாழ்ந்து வருகின்றன சிறுமுகை மேட்டுப்பாளையம் வனச்சராக பகுதிகளில் அதிக அளவில் நீர் பிடிப்பு பகுதிகள் உள்ளதால் கூட்டம் கூட்டமாக புள்ளிமான் நடமாடி வருகின்றன...!
இந்த நிலையில் இன்று காலை உணவு தேடி வந்த புள்ளிமான் ஒன்று தனியார் நர்சரி தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த நைலான் வேலியில் சிக்கி பல மணி நேரமாக உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது சம்பவ இடத்திற்கு உடனடியாக வனத்துறை வந்திருந்தால் புள்ளிமான் உயிரை காப்பாற்றி இருக்கலாம். என்று கூறப்படுகிறது...! வனத்துறையினரின் மெத்தனப்போக்கால் புள்ளிமான் உயிர் இழந்துள்ளது கூறப்படுகிறது..!!
. மேலும் வனத்துறையினர் கூறும் போது பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின் புள்ளிமான் இறந்ததற்கான காரணம் தெரியவரும் என்று தெரிவித்துள்ளனர். மேலும் மான் இறந்த இடத்திற்கு மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் நேரில் வந்து மானின் உடலை கைப்பற்றி வனச்சரக அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

🥦 கே தமிழகம் சேட் ✍️